வியாழன், 17 ஜனவரி, 2013

மாதாந்த பரீட்சை கணிதம் தரம் 6


   கவனிக்க :
*        பரீட்சை வினாத்தாள்களையும், விடைகளையும், உங்கள் பெறுபேறுகளையும் எமது இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
*        எல்லா வினாக்களுக்கும் விடை எழுதுக.
v சரியான விடையை தெரிவு செய்க
1.      ஒரு குறித்த புள்ளியிலிருந்து மாறாத்தூரத்தில் அசையும் புள்ளியின் ஒழுக்கு எது ? 
1)      சதுரம்          2) வட்டம்            3)முக்கோணி          4)செவ்வகம்
2.      தரப்பட்டுள்ள வட்டத்தின் மையம் யாது 
1)      A             2)B         3)C        4)D
v பின்வரும் வினாக்களுக்கு விடை தருக
3.      3412 இவ் எண்ணின் நூறாம் இடத்து இலக்கம் யாது?
4.      678756 இவ் எண்ணை எழுத்தில்  தருக ?

5.      10437 இல் 0 எவ்விடத்தில் அமைந்துள்ளது ?
6.      அறுநூறாயிரத்து இருநூற்று எண்ணூற்று இருபத்தெட்டு என்பதை இலக்கத்தில் தருக
7.      ஒரு மில்லியனில் உள்ள பூச்சியங்களின் எண்ணிக்கை யாது ?
8.      சுருக்குக
 352 + 45      =
112 × 1000   =
320  10      =
224  4        =
678 -356        =
9.      கட்டில் ஒன்றின் விலை 25550 ரூபா மேசை ஒன்றின் விலை 12000 ரூபா இரண்டையும் வாங்குவதற்கு எவ்வளவு தேவை ?
10.  பெருந்தொன்றின் நிறை 2600 kg ஆகும் அப்பேருந்தில் பயணிகள் ஏறிய பின் நிறை 3200 kg எனின், பயணிகளின் நிறை யாது?
11.  ஒரு பாணின் விலை 60 ரூபா எனின், 10 பாண்களின் விலை யாது ?
12.  குமார் தனது மூன்று பிள்ளைகளுக்கு தன்னிடமிருந்த  69 மாம்பழங்களை சமமாக பிரித்து வழங்கினான் எனின் ஒரு பிள்ளைக்கு கிடைத்த பழங்களின் எண்ணிக்கை யாது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக