ஞாயிறு, 20 ஜனவரி, 2013

மாதாந்த பரீட்சை கணிதம் தரம் 9


*         எல்லா வினாக்களுக்கும் விடை எழுதுக
1.       விஞ்ஞான முறையில் எண்களை குறிப்பதால் நாம் பெறும் நன்மை ஒன்று தருக?
2.       0.7578 என்பதை விஞ்ஞான முறையில் தருக?
3.       875.23 என்பதை விஞ்ஞான முறையில் எழுதும் போது 10 இன் வலு யாது?
4.       5.25 10-2 என்பதை சாதாரண எண்ணாக்குக?
5.       4566 ஐ கிட்டிய நூறுக்கு மட்டந்தட்டுக?

6.       1.237 102 என்பதை கிட்டிய முழு எண்ணிற்கு மட்டந்தட்டுக?
7.       பெறுமானத்தை முழு எண்ணாக மதிப்பிடுக?
 58.25+74.62
8.       0.895  ஐ முதலாம் தசமதானத்திற்கும் முழு எண்ணிற்கும் மட்டந்தட்டுக?
9.       1,4,9,25…….. இத்தொடரின் பொது உறுப்பு யாது?
10.    127689 என்பதை கிட்டிய எப்பெறுமானத்திற்கு மட்டந்தட்டுவதன் மூலம் விஞ்ஞானமுறையில் 1.28 103    என்றவாறு எழுதலாம்?
( )
11.    அடுத்துவரும் இரு உறுப்புக்களை எழுதுக?
5,7,9,11,  ………….,    ………….
128,64,32,16,….,…     ………….
10,5,0,-5,-10,………,    ..………..
4,7,10,13,………….,    ………….
12.    பின்வரும் எண்களை கிட்டிய எப்பெறுமானத்திற்கு மட்டந்தட்டுவதன் மூலம் அதனை ஒரு எண் தொடராக்கலாம்? அவ்வாறு நீங்கள் மட்டந்தட்டி பெற்ற தொடரை எழுதுக? 
   412,578,836,988
13.    அன்றாட வாழ்க்கையில் நாம் மதிப்பிடும் சந்தர்ப்பங்கள் 2 தருக?
14.    ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு 185 l நீர் தேவை 5850 l கொள்ளளவுள்ள தாங்கி நீரினால் நிரம்பியுள்ளபோது எத்தனை மனிதருக்கு ஒரு நாளைக்கு போதுமானதாக இருக்கும் என மதிப்பிடுக?
15.    நிமலனின் நிறை 36.85 kg ஆகும் இதனை கிட்டிய kg மிற்கு மட்டந்தட்டுக ,கிட்டிய 100g ற்கு மட்டந்தட்டுக?
( )


ஆசிரியர் :............................................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக