ஞாயிறு, 30 ஜூன், 2013

MONTHLY EXAM FEBRUARY MATHS G-6


grade -6          one hour     name......................
1.  சூழலிலுள்ள வட்டவடிவான பொருள் ஒன்றை தருக?
2.    6785 + 41 =.................................... 3.276-123=.............................................                                                                            
4.    126 x 100 =……………………………. 4.864 ………………………..
6.    65 செக்கன் என்பதை நிமிடம் ,செக்கனில் கூறுக?
7.    பி.ப 7.45 என்பதை சர்வதேச நியம முறையில் தருக ?
8.    526 600 என்பதை சொற்களில்  தருக?
9.    பதினாறாயிரத்து எண்ணூற்று எழுபத்திரெண்டு என்பதனை இலக்கத்தில் தருக?
10. 1800 செக்கன் என்பதனை நிமிடத்தில் தருக?
11. 1986 மார்ச் 21 என்பதனை சர்வதேச நியமமுறையில் தருக ?
12. 1240 g kg இல் தருக
13. 124 cm m இல் தருக
14. முட்டை இரண்டின்  விலை 24 ரூபா எனின் 5 முட்டை களின் விலை யாது?
15. மகனின் வயதின் மும்மடங்கு தந்தையின் வயதாகும் மகனின் வயது 12 வருடம் 6 மாதம் 12 நாட்கள் எனின் தந்தையின் வயது என்ன ?



1.    மீன்குமிழ் ஒன்றின் விலை 425.00 ரூபா மின்சூழ் ஒன்றின் விலை 370.00 ரூபா ஒரு மின்சூழும் 4 மீன்குமிழும் வாங்க எவ்வளவு செலவாகும்?
2.    பின்வரும் நிகழ்ச்சியில் திகதிகளையும் நேரங்களையும் நியமமுறையிலும்,24 மணித்தியால கடிகார முறையிலும் தருக?
பொது வைத்தியசாலை சிரமதானம் :-2013 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆந் திகதி காலை 9.00 மணிக்கு
3.    8,2,6,7 ஆகிய இலக்கங்களை  ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தி அமைக்கக்கூடிய மிகப்பெரிய எண் யாது?
4.    மிகச்சிறிய எண் யாது?
5.    பென்சிலோன்றின் விலை 10 ரூபா, புத்தகப்பையோன்றின் விலை 25 பென்சிலின் விலைக்குச்சமன் எனின் 5 பென்சிலும் ஒரு புத்தகப்பையும் வாங்கிய நிமல் 500 ரூபாத்தாளை கொடுத்தால் அவனுக்கு கிடைக்கும் மீதியை காண்க?
6.    ஒரு தந்தை தன்னிடமுள்ள 39,000 ரூபா பணத்தை தனது மூன்று மகன்களுக்கும் சமமாக பிரித்துக்கொடுத்தால் ஒருவனுக்கு கிடைக்கும் தொகை எவ்வளவு?
7.    ஒருநாளில் எத்தனை மணித்தியாலங்கள் ? அதனை நிமிடத்தில் தருக?
8.    ஒருவனுக்கு ஒருநாளைக்கு  5 l நீர் தேவை இவ்வாறான 8  பேருக்கு 500 l தங்கியிலுள்ள நீர் எத்தனை நாட்களுக்கு போதுமானது?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக