v சரியான விடையின் கீழ்
கோடிடுக
1. “பெருந்தடங்கட் பிறைநூதலார் க்கெலாம் …..” இங்கு நுதல் என்பதன் ஒத்தசொல்
1) வெற்றி 2) நயனம் 3) சந்திரன் 4) நெற்றி
2. “ஆழிவாய்ச்சத்தம்
அடங்காதோ” இங்கு ஆழி என்பதன் ஒத்த சொல்
1) கடல்
2) சக்கரம் 3) காற்று 4) அகழி
3. “பாரதியின் பாடல்களை
பாமரரும் படித்தின்புறுகின்றனர்.” பாமரர்
என்பதன் எதிர்பொருட் சொல்
1) இளமை
2) நவீனம் 3) புதுமை 4)
புராதனம்
4. “கார் என்று பேர்
படைத்தாய் ககனத்துறும் போது” இதில் ககனம் என்பதன் பொருள்
1)கடல்
2) வானம் 3) ஆறு 4) மேகம்
5. சிங்கத்தின் இளமைப்பெயர்
குருளை என்பது போல யானையின் இளமைப்பெயர்
1)கன்று 2)
குட்டி 3) கெரும் 4)போதகம்
6. Cartoon என்பதன் தமிழ் வடிவம்
1)சித்திரம் 2)கேலி 3)கதை 4)கேலிச்சித்திரம்
7. பறவைகள் கூட்டம்
கூட்டமாக .....................
1)பறந்தன 2)பறந்தது 3)பறந்தவை 4)பறந்தனர்
8. நடக்க இருக்கும் நிகழ்வுகளை எதிர்வு கூறுபவர்
1)ஆத்திகன் 2)நாத்திகன் 3)சாத்திரி 4)தீர்க்கதரிசி
9. பின்வருவனவற்றுள்
வாக்கியம் அல்லாதது
1)யாது செய்வோம் 2)போயி பேசாதீர் 3)மாதவன் பாடினான் 4) ஓடிய மான்
10. வெளிப்படையான பொருளில்
புகழ்ந்தும் மறைப்பொருளில் இகழ்ந்தும் கூறுதல்
1)புகழ்ச்சி 2)இகழ்ச்சி
3)அங்கதம் 4)அங்கதன்
11. வந்தேன் என்ற சொல்லின்
வினையடி
1)வரும் 2)வந்த 3)வரு 4) வா
12. பின்வருவனவற்றுள்
உரிச்ச்சொல்லாக அமைவது
1)மற்று 2)ஊறு 3)வந்து 4)போய்
13. மெய்,வாய் கண் மூக்கு செவி என்பன
1)ஐம்பொறி
2)ஐம்பூதம் 3)ஐந்நிலம் 4) ஐம்புலன்
14. “கடுங்காற்று வேகமாக
வீசியது” இங்கு வேகமாக என்பது
1)எழுவாய் அடைமொழி 2)பயனிலை அடைமொழி 3)பயனிலை 4)செயற்படுபொருள் அடைமொழி
15. “வாணியின் தேன்மொழியால்
சபையோர் மகிழ்ந்தனர்” இங்கு தேன்மொழி என்பது
1)பண்புத்தொகை 2) உவமைத்தொகை 3) அன்மொழித்தொகை 4)வினைத்தொகை
16. “தமிழின் மொழியோ பழமை வாய்ந்தால்” ......... இங்கு பழமை
என்பதன் எதிர்ப்பொருட்சொல்
1)இளமை 2)நவீனம் 3)புதுமை 4)புராதனம்
17. முகங்கொடுத்தல் எனும்
மரபுத்தொடர் தரும் கருத்து
1)
அன்புகாட்டுதல் 2)மனம் நோகல் 3)எதிர்கொள்ளுதல் 4)நேரே நிந்தித்தல்
18. பாலோடு தண்ணீர் கலந்தான்
இங்கு ஓடு என்பது
1)இரண்டாம் வேற்றுமை 2) மூன்றாம் வேற்றுமை 3)
நான்காம் வேற்றுமை 4) ஐந்தாம் வேற்றுமை
19. தேர்தல் நெருங்கி
வருவதால் தேர்தல் ...................... சூடு பிடித்துள்ளது
1)விஞ்ஞாபனம் 2) பிரசுரம் 3) பிரசாரம் 4)வாக்குமூலம்
20. மல்லிகைகையின் நறுமணம் தென்றலுடன்
.............வென வீசியது
1)குளு
குளு 2)கம
கம 3) விறு விறு 4)கல கல
21. “மரத்தால் விழுந்தவனை
மாடேறி மிதித்தது” இங்கு விழுந்தவனை என்பது
1)பண்புப்பெயர்
2)வினையால் அணையும் பெயர் 3)தொழிற்
பெயர் 4)குணப்பெயர்
22. வாலிபத்துணிவு என்பதனை
உணர்த்தும் பழமொழி
1)ஆனைக்கும்
அடி சறுக்கும் 2)இளம்கன்று பயம் அறியாது
3)இளமையிற்கல்வி சிலையில் எழுத்து 4)ஆழம் அறியாமல் காலைவிடாதே
23. கற்றூன் என்பதனை
பிரித்தால்
1)கல்+தூண்
2)கற்+தூண் 3)கள்+தூண் 4)கற்+நூண்
24. “வேட்பாளர்கள் சந்து
பொந்தெல்லாம் சென்று பிரசாரம் செய்தனர்”
இங்கு சந்து பொந்து என்பது 1)அடுக்குத்தொடர் 2)இணைமொழி 3)பழமொழி 4)இரட்டைக்கிளவி
25. அறுபதாம் ஆண்டில்
கொண்டாடப்படும் விழா
1)பவள
விழா 2)வைர விழா 3)வெள்ளி விழா 4)பொன்விழா
(25 ×2
=50 புள்ளிகள்)
பகுதி 2
v பின்வரும் வினாக்களுக்கு
விடை தருக
1. சொற்புணர்ச்சி என்றால்
என்ன உதாரணம் தருக?
2. சுட்டெழுத்து எத்தனை வகை
?அவை யாவை ?
3. பின்வரும் சொற்களின் மாத்திரைகளை
கணிக்க (விறகு ,நாடு ,கட்டில்
)
4. பின்வரும் சொற்களை குற்றியலுகரத்துள்
வகைப்படுத்துக்க (நாக்கு,தராசு,அஃது,பாம்பு,பந்து,சால்பு)
5. பின்வரும் தொடரை
பிரித்து எழுதுக ?
“நாமமது
தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல் நன்றோ”
6. சோதி என்ற சொல்
பெயராகவும் வினையாகவும் வருமாறு தனித்தனி வாக்கியங்களில் எழுதுக?
7. (விடயங்களை,தூண்டுகிறது
,சிந்திக்கவும், மட்டும்,
கேலிச்சித்திரம், நின்று விடாது , மனிதனை ,தெளிவுபடுத்துவதுடன் )
மேலே ஒழுங்குமாறி
தரப்பட்டுள்ள சொற்களை ஒழுங்குபடுத்தி கருத்துள்ள வாக்கியமாக எழுதுக ?
(20 புள்ளிகள்)
v பின்வரும்
இலக்கியப்பகுதி வினாக்களுக்கு விடை தருக
“சொல்வல்லான் சோர்வு இலன் அஞ்சான் அவனை
இகல் வெல்லல்
யார்க்கும் அரிது”
|
1. இக்குறட்பாவின் பொருளை
எழுதுக?
2. மாசற்ற அறிவுடையோர்
எதனைச் சொல்ல மாட்டார் என வள்ளுவர்
கூறுகிறார் ?
3.
பின்வரும்
செய்யுள் பகுதியை வாசித்து அதன் கீழ் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடை தருக
அற்ற குளத்தில் அறுநீர்ப்பறவை போல
உற்றுழித்
தீர்வார் உறவல்லர்-அக்குளத்தில்
கொடியும் ஆம்பலும் நெதலும்
போலவே ஒட்டி உறவார் உறவு.
|
1. இப்பாடல் இடம்பெறும்
நூல் யாது?
2. இப்பாடலின் பொருளை உமது
மொழி நடையில் எழுதுக ?
3. இப்பாடலின் மூலம்
உண்மையான உறவினர் யாவர் என கூறப்படுகின்றது?
4. இப்பாடலில்
இடம்பெற்றுள்ள அணியை குறிப்பிட்டு விளக்குக ?
(30 புள்ளிகள்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக