வியாழன், 17 ஜனவரி, 2013

மாதாந்த பரீட்சை தமிழ் தரம் 7


v  சரியான விடையின் கீழ் கோடிடுக
1.       ஒரு வாக்கியத்தின் செயலை குறிப்பது
 1)எழுவாய்          2)பயனிலை              3)அடைமொழி           4)செயற்படுபொருள்
2.       “மன்னனின் ஒளி எங்கும் பரவியது” இங்கு ஒளி என்பது
1)வெளிச்சம்       2)சத்தம்                        3)புகழ்                           4)சூரியன்
3.       காதர் நன்றாக ..................
1)படுவான்          2)பாடினாள்                3)பாடினார்                   4)படியது
4.       “அழகிய மான்  துள்ளி ஓடியது” இங்கு வந்த பெயரடை எது?
1)துள்ளி                  2)ஓடியது                     3)அழகிய                         4)மான்
5.       “கண்ணன் வேகமாக சென்றான்” இங்கு வந்துள்ள வினையடை எது?
1)கண்ணன்            2)வேகமாக                 3)சென்றான்                   4)விரைவாக
6.       “கிளியும் குயிலும் எங்கள் வீட்டில் வளர்கின்றன”  எது எவ் வகை வாக்கியம் ஆகும்
1)தனிவாக்கியம்     2)கூட்டுவாக்கியம்     3)வினைவாக்கியம்     4)கலப்புவாக்கியம்
7.       “கிளி கூட்டில் வாழ்கின்றது” எது எவ் வகை   வாக்கியம் ஆகும்
1)தனிவாக்கியம்    2)கூட்டுவாக்கியம்     3)வினைவாக்கியம்     4)கலப்புவாக்கியம்
8.       “சூரிய உதயம் அழகானது” இங்கு உதயம் என்பதன் எதிர்கருத்து சொல்
1)மறைவு                2)உலர்ந்த                        3)வெளிச்சம்     4) சோர்வு
9.       “இரசிதா துணிவு நிறைந்தவள்” இங்கு துணிவு என்பதன் எதிர்கருத்து சொல்
1)பயம்                     2)கோபம்                       3)அச்சம்             4)சந்தேகம்
10.    தென்னை,பனை ,கமுகு என்பவற்றின் சினையை குறிக்கும் மரபுப்பெயர்
1)இலை                   2)தாள்                          3)தந்து            4)ஓலை

(10×5=50புள்ளிகள்
v கீழ் வரும் பந்தியயை வாசித்து வினாக்களுக்கு விடை தருக
யார் குதிரை முட்டையின் மேல் உட்கார்ந்து அடைகாப்பது? என்றார் குரு. அதற்கு “குருவே நான் மாடுகளை மேய்க்க வேண்டும்” என்றான் மட்டி அதேபோல “நான் மடத்தை பெருக்கி தண்ணீர் தெளித்து கோலம் போட வேண்டும். கடைக்கு சென்று காய்கறிகள் வாங்கிவர வேண்டும் இத்தனை வேலைகள் இருப்பதால் என்னால் எப்படி அடைகாக்க முடியும்?” என்றான் மூடன்.
1.       இங்கு வந்துள்ள கதப்பாத்திரங்களின் பெயர்களை தருக ?
2.       மூடன் செய்யும் வேலைகள் யாவை?
3.       இங்கு வந்துள்ள வாக்கியங்களில் உள்ள  பயனிலைகள் மூன்று தருக ?
4.       இங்கு வந்துள்ள கூட்டு வாக்கியம் ஒன்று தருக ?
5.       அதை தனித்தனி வாக்கியங்களாக தருக ?
       (5×7=35புள்ளிகள்)
v  இடைவெளிகளுக்கு பொருத்தமானவற்றின்  கீழ் கோடிடுக 
1.       ....................... கோயிலுக்கு சென்றோம்      (நான்,நாங்கள் ,அவர்கள் )
2.       நான் தினமும் அதிகாலையில் .....................(எழும்புகின்றேன் ,எழுந்தேன்,எழும்புகிறான்)
3.       கம்பர் இராமாயணத்தை ......................... (இயற்றினார் ,இயற்றுவார் ,இயற்றுகின்றார்)
4.       பறவைகள் ................................................    (பறந்தது ,பறக்கின்றது ,பறந்தன)
5.        அம்மா ...................... பாடுவார்              (இனிமையான ,இனிமை,இனிமையாக)           (5×3=15புள்ளிகள்)



1 கருத்து: