வியாழன், 17 ஜனவரி, 2013

மாதாந்த பரீட்சை தமிழ் தரம் 8


v  மிகப் பொருத்தமான விடையின் கீழ் கோடிடுக
1.       இகம் என்பதன் எதிர்ப்பதம்           
1)      முறம்                             2) பக்கம்                       3)பரம்                         4)முகம்
2.       வெள்ளை முயல் வேகமாக பாய்ந்தது  இதில் வந்துள்ள வினையடை
1)      பாய்ந்தது                      2)முயல்                          3)வேகமாக                4)வெள்ளை
3.       நான் எழுதிய கடிதம் கிழிந்து விட்டது இதில் வந்த பெயரெச்சம்
1)கிழிந்து                            2)கடிதம்                         3) நான்                           4)எழுதிய
4.       தமிழில் உள்ள முதலெழுத்துக்கள்
1)12                                         2)18                                 3) 30                            4) 247
5.       தின்றான் என்பது ஒரு
1)உரிச்சொல்                     2)உருபு                            3)இடைச்சொல்        4) பெயரடை
6.       அரசன் குளத்தை கட்டுவித்தான் இது எவ்வகை வினை
 1)தான் வினை                  2)குறிப்பு வினை           3) பிறவினை                 4) கூட்டுவினை
7.       பின்வரும் வினைகளில் எது  செயற்படு பொருள் இன்றி வரும்

1)நனைந்தாள்                    2) எரித்தாள்                    3)சிரித்தான்                    4) படித்தான்
8.       செழுமை என்பதன் எதிர்ப்பதம்
 1)இழுமை                         2)வறட்சி                         3)பதுமை                       4)மாரி
9.       நான் நண்பனுக்கு உதவினேன் இதில் வந்த உருபு ஏற்ற பொருள்
 1)ஏது                                   2)எல்லை                        3)கொடை                      4)நீக்கல்
10.    உடமை வேற்றுமை எனப்படுவது
1)2ம்வேற்றுமை                2) 3ம்வேற்றுமை              3) 5ம்வேற்றுமை           4) 6ம்வேற்றுமை
(10×4=40புள்ளிகள்)
v  பின்வரும் வினாக்களுக்கு விடை தருக
1.       தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களும் யாவர் ?
2.       “உங்கள் வழக்கை சொல்லுங்கள்” இது யாரால் யாருக்கு கூறப்பட்டது?
3.       சோழர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு பெயர்கள் மூன்று தருக ?
4.       கரிகாலன்  எந்நகரை மையமாக கொண்டு ஆட்சி செய்தான் ?
5.       முதல் எழுத்துக்கள் எனப்படுபவை எவை?
6.       வினையெச்சம் கொண்டு ஒரு வாக்கியம் அமைக்குக?
7.       பெயரெச்சம் கொண்டு ஒரு வாக்கியம் அமைக்குக?
8.       இரட்டைக்கிளவி,அடுக்குதொடர் ஆகியவற்றுக்கு ஒவ்வொரு உதாரணம் தருக?
9.       தன்வினை வாக்கியம் ,பிறவினை வாக்கியம் ஆகியவற்றுக்கு  ஒவ்வொரு உதாரணம் தருக?
10.    செயற்பாட்டுவினை,உடன்பாட்டுவினை ஆகியவற்றுக்கு  ஒவ்வொரு உதாரணம் தருக?
(60புள்ளிகள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக